FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on July 06, 2024, 05:23:15 AM

Title: காதலால் (female version)
Post by: Mr.BeaN on July 06, 2024, 05:23:15 AM
நடு ஜாம நேரத்திலே
நாடுறங்கும் வேளையிலே
கண்ணுரங்க தோனாம
கனவொண்ணு வந்துருச்சு
கனவுல வந்தவன் நீ
கை விட்டு போறது போல
காட்சி தெரியத்தான்
கண்ணிரண்டும் கலங்கிருச்சு
பருவம் தான் வந்த பின்னே
பாவி எந்தன் நெஞ்சுக்குள்ள
நுழைஞ்சு நீயும் இப்போ
கலங்கத்தான் வச்சிட்டியே
கலங்கமில்லாத காதல்தான் கொண்டு உன்னை என் நெஞ்சில்
வச்சு நீயும் தச்சிட்டியே
கண்ணாடி வலையலுடன்
கால். கொலுசும் சந்தமிட
உன்னோட நானும்
கூட வந்திடவே ஆச பட்டேன்
சிந்தனை எல்லாம்
உன்னை மட்டும் சுத்தி வர
என் சொந்தமும் நீயோ
என்ன விட்டுத்தான் எங்கு சென்றாய்?
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
எல்லாம்.சேர்த்து வச்சு
உன்னிடத்தில் சொல்ல.வந்தேன்
வந்த இடத்திலோ
நீயும் இங்கு இல்லையின்னு
மங்கை நானும் இப்போ
மயங்கித்தான் போறேனே
என்னில் குடி புகுந்த
உன்னுடனே வாக்கப்பட
அன்னம் தண்ணி இன்றி
அலுப்புடனே நான் கிடக்கேன்
என்னம் மாற்றிக்கொண்டு
நீ - என்னை வந்து சேர்ந்துவிடு் ..