FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: joker on July 04, 2024, 07:54:27 PM
		
			
			- 
				
 அழகான காலை
 மேகம் மூடிய வானம்
 முகம் காட்ட துடிக்கும் சூரியன்
 தீடீரென இடி இடித்தது
 அட எப்படி ?
 
 விடை தந்தது அம்மாவின் குரல்,
 காலையில் கனவு கண்டு படுக்காம
 கல்லூரிக்கு கிளம்பு என்று
 
 உன்னை காண போகிறேன்
 என்று தெரியாமல் சென்றேன்
 கல்லூரிக்கு
 உன்னை நான் கண்ட முதல் நாள்
 
 அழகான இசை எதுவென்றால்
 உன் கால் கொலுசின் ஒலி என்பேன்
 
 உன் கண் இமைக்கும் ஒவ்வொரு முறையும்
 என் உயிரும் சிறை கொள்ளுதடி
 
 காதல் ஒரு மாயை
 வந்த நேரம் தெரிவதில்லை-அது
 சொல்லிக்கொண்டும் வருவதில்லை
 
 காதலுக்கு மூன்றெழுத்து
 அவளால்வந்த கவிதைக்கும்
 மூன்றெழுத்து
 
 பூ போல உன்னை தாங்குவேன் என
 உணர்த்த காதலுடன் பூச்செண்டு கொண்டு
 காத்திருக்கிறேன்
 பூச்செடியில்  முள்ளும் உண்டு என
 உணர்த்தி போவாளோ !?
 
 உணர்வுகள்தான்
 வாழ்வின் ஆதாரம் என்றால்
 உன் மேல் நான் கொண்ட
 காதல் உணர்வு தான்
 என் வாழ்வின் ஆதாரம்
 
 ஆணின் அன்பில்
 மென்மை இல்லாமல்
 இருக்காலம் ஆனால்
 உண்மை இருக்கும்
 
 பெண்ணின் அன்பில்
 மெய்யும் இருக்கும்
 தாய்மையும் இருக்கும்
 
 காத்திருக்கிறேன், விடை சொல்
 என்னை தாலாட்ட வருவாயோ!?
 உன் காதல் சொல்ல வருவாயோ !?
 
 
 
 ****JOKER****