FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: Mr.BeaN on July 04, 2024, 04:01:29 PM
		
			
			- 
				கோழியை போல் மண்டையில
 கொண்ட ஒன்னு நீ போட்டு
 வானத்து அறை நிலவ
 நெத்தியென வச்சிக்கிட்டு
 இரவாடை தனை உடுத்தி
 என் எதிரில் அமர்ந்திருப்ப
 என் மனசு நினப்பதுவோ
 நீ -எனக்காக பொறந்துறுப்ப
 உன் கண்ண பாத்துகிட்டு
 உலகத்தை தான் மறந்து
 நான் பேசி மெய்சிலிர்க்க
 நீ உதிர்ப்ப பூஞ்சிரிப்ப
 
 கண்ணாலே. உன்ன நான்
 கைது பண்ணி நெஞ்சில் வச்சு
 என்னோட மனசில் தான்
 உன்னை மட்டும் நானும் வச்சு
 களவாணி பயலாவே
 உன்னாலே மாரிடுவேன்
 சில நேரம் நட்புடைய
 எல்லையுமே மீறிடுவேன்
 நெத்தியில பொட்டும் இன்றி
 நீ இருக்கும் நேரத்திலே
 சுட்டிக்காட்டி நானும் தான்
 போட்டு உன்ன வைக்க சொல்வேன்
 
 கை விரலில் மோதிரமும்
 நீ பொட மாட்டனு
 கடிஞ்சி நான் பேச
 கள்ளமாய் நீ சிரிப்ப
 கண்ணில் காந்தம் ஒன்னு
 வச்சிருக்க நீயின்னு
 நானும் சொல்லையிலே
 கச்சிதமாய் தான் முறைப்ப
 இப்படி பல நாளும்
 உன்னோடு கூடித்தான்
 பேசிய நாளெல்லாம்
 எப்படித்தான் நான் மறப்பேன்..