FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: Mr.BeaN on July 02, 2024, 05:54:20 PM
		
			
			- 
				விரலால் தொடு திரையை
வீனையென நீ மீட்டி
எழுத்தை இசையெனவே
எனக்கும் தான் பரிசளித்தாய்
காலை மாலை என
காலத்தை பிரிக்காமல்
காற்றாய் என்னுள்ளே
நீதானே கலந்திருந்தாய்
குரலும் குழலெனவே
என் காதில் எதிரொலிக்க
உந்தன் அழைப்பிற்க்கே
உவகையுடன் காத்திருந்தேன்
எந்தன் எண்ணத்தில்
எப்போதும் நிறைந்தவளே
உனக்கே என் எழுத்தை
உயிரேனவே பரிசளித்தேன்
அன்று இன்றென
அளவெதுவும் இல்லாமல்
என்றும் உன் மீதே
உயிர்க்காதல் நான் கொண்டேன்
நீ தந்த காதலுக்கு
கைம்மாறு எதுவுமில்லை
என்றே விழிபிதுங்கி
கலங்கித்தான் நான் நிற்க
எந்தன் உயிர் ஒன்றே
அதற்கீடு என எண்ணி
உயிரை உனக்கும்தான்
உயிலாக தர நினைத்தேன்
எல்லாம் முடிந்ததென்று
நீ சொல்லும் வேளையிலே
ஏனோ நானின்று
என்னை இழந்தேனே..