FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on June 29, 2024, 07:07:09 PM

Title: கொல்ல விருப்பமில்லை !
Post by: joker on June 29, 2024, 07:07:09 PM
உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ ஒழுக்கத்தின்
உதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உழைப்பின்
சிகரம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ சேமிப்பதில்
எடுத்துக்காட்டு

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ முயற்சியின்
முன்னுதாரணம்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
நீ உன் துணை மேல்
அன்பானவன்

உன்னை கொல்ல
விருப்பமில்லை
ஆனால்
அறியவிரும்புகிறேன்
உன்னை இப்படி
வாழ கற்றுத்தந்தது
யாரோ !?

எறும்பே!
எதுவாயினும்
உன்னை கொல்ல
விருப்பமில்லை


****JOKER****