FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on June 20, 2024, 11:14:11 PM
-
பிடித்தவருக்காகவா... இல்லை நம்மை
பிடிக்காதவருக்காகவா....
நினைவில் இருப்பவைக்காகவா... இல்லை
மறக்க நினைக்கும் நிகழ்வுக்காகவா....
புரிந்தவருக்காகவா. இல்லை
நம்மை பிரிந்தவருக்காகவா....
எதற்காக என தெரியாமல்.. என்றும்
வடிகிறது இந்தக் கண்களில் ...
இரவை இருட்டாய் படைத்த
இறைவனுக்கு ஒரு நன்றி.. இல்லையெனில்
இந்த உலகிற்கு காட்டிக்கொடுத்துவிடும்
நம் விசும்பலையும் நம் அழுகையையும்...
வண்ணம் தீட்டாத கண்ணீருக்காய்
கடவுளுக்கு என்றும் நன்றி... இல்லையெனில்
பல தலையணைகள் காட்டிக்கொடுத்துவிடும்
பலரது ரகசிய வேதனைகளை....
கண் முன் தோன்றாக் கள்வன் இறைவன்
கண் இருந்தும் குருடாக்குவது இவ்விரவு...
இன்பத்தை தொலைத்த இவ்வாழ்வில்
இரவே துணையா அல்லது இறைவனே துணையா....