FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on June 12, 2024, 08:27:59 PM

Title: மௌனம்
Post by: joker on June 12, 2024, 08:27:59 PM
மயில் இறகை
நெஞ்சோடு சேர்த்து அணைத்து
எனக்கு பரிசாய் தந்தாய்
புத்தகத்தின் இடையில் வை
பெருகும் என்றாய்

பெருகியது என்னமோ
உன் மீதான
நினைவுகள் தான்

சில நேரம்
புன்னகைகள் கூட
சோக கதைகளை கூறுவதுண்டு

எழுத்துக்களால்
நிரம்பிய இந்த காகிதம் 
பெரும்பாலும் எழுத்துகள்
இல்லாமல் காலியாகவே இருந்தது
என் மனம் போல

எழுத்துக்களை இணைத்து
வார்த்தைகளை உருவாக்கி
சொற்களை ஒன்றிணைத்து
வரிகளாக மாற்றி
அந்த வரிகளை
முழுமையடையாத
புத்தகப் பக்கங்களாய்
நிரப்புகிறேன்

என்னை விட்டு
விலகி இருக்க என்னும்
உன் இதயத்தை நான்
அறியவில்லை
சீட்டு வீடாக
நொறுங்கி விழுகிறது
காரணமின்றி
என் இதயம்

என்னுள்
நீ வசந்தமா
உன்னில்
நான் வசந்தமா. 
என்று அடிக்கடி நினைப்பேன்
ஆனால்
பதில் என்னமோ
"மௌனம்"


****JOKER****
Title: Re: மௌனம்
Post by: Ishaa on June 13, 2024, 01:07:43 AM
Romba naala enakku oru Aasai.
Ftc la Oviyam Uyiragirathu nighalchiyila.
Pala Oviyam Varigal moozham Uyir agiyathu.
Ithuve Varigalai Oviyamai parkanum enru chinna oru aasai.
Joker, unga kavithai varigal padikka ennul vantha sila varaithal...
Pencil kaiyil eduthu romba naal achu...

(https://i.postimg.cc/pLWM6YT1/20240612-212024.jpg)

(https://i.postimg.cc/5yBDP6MV/20240612-212105.jpg)

(https://i.postimg.cc/SxNHrSTB/20240612-212118.jpg)

Title: Re: மௌனம்
Post by: joker on June 13, 2024, 01:37:45 PM
ஆஹா அருமை Ishaa
என் எழுத்துக்களுக்கு
உருவம் கொடுத்ததற்கு

என் எழுத்துக்கள் பிடித்து
likes வருவதே பெரிய விஷயம்
அதற்க்கு தூரிகையால்
உருவமும் கொடுத்து
உங்கள் திறமை அறிய
செய்தமைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்

உங்கள் ஓவியங்களை
தனியாக பதிவிடுங்கள்
எல்லாரும் ரசிக்கட்டும்

வாழ்த்துக்கள்


Title: Re: மௌனம்
Post by: Ishaa on June 13, 2024, 11:58:07 PM
Nandri, Joker. 😊
En kirukkalai parthu oviyam enru sonnathukku nandrigal. Naan varainchathu thaniyaga pathividhal athukku uyir illama poyirum.
Unga kavithaiyal uruvanathu inthe padangal.
 So Ithu inga than irukurathu sari.
Title: Re: மௌனம்
Post by: VenMaThI on June 14, 2024, 10:52:11 AM


Ahaaa arumai 2 perum pinreengale... Ishaa sis super, semaya draw panrenga... Joker nanbaa epome unga kavithaigal thani sirappu thaaan...