FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on June 08, 2024, 03:30:00 PM
-
சுமை
சஞ்சீவி மலை கூட
சுமையாய் தெரியவில்லை
அன்புடன் அனுமன் அதை
ராமனுக்காய் சுமக்கயிலே....
கருவில் இருந்த சிசுகூட
சுமையாய் தெரியவில்லை
பொறுமை கொண்ட பெற்றோராய்
பிஞ்சுப்பாதம் பூமிக்கு வரும்வரை காத்திருக்கயிலே....
வேலைப்பலு கூட
சுமையாய் தெரியவில்லை
குடும்ப உறவுகளுக்காய்
நொடிநேரமும் நிற்காமல் உழைக்கயிலே....
அம்மா செய்த எதுவுமே
சுமையாய் தெரியவில்லை
அப்படி ஒரு உறவு.. இவுலகில்
நமக்கு இல்லாமல் போகும் வரை...
அவள் சுமையை தன் தோளில்
சுமக்கையில் தான் தெரிகிறது
அவளுக்கான ஊதியம் கொடுக்கும் அளவிற்கு
இப்பூமியில் எவனும் சம்பாரிக்கவில்லை என்று....
இருக்கும் வரை தெரியாத அருமை
இல்லாத போது தான் ஆழமாய் புரிகிறது
யார் உரைத்தும் கேட்காத இந்த மனதிற்கு
உறவுகளை இழப்பதும் மிகப்பெரிய சுமையென்று....
-
வாழும் வரை சுமப்பதற்கே
உறவுகள் என்றும் அழகிய தொடர்கதை 🌹
அருமையான பதிவு
வெண்ணிலவே 🌹பாபு