FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on June 06, 2024, 06:00:24 PM
-
சுயநலம்
அரசியலும் அள்ளித்தரும்
அரசியல்வாதியாய் நீ இருந்தால்
விளையாட்டும் வாரி வழங்கும்
ஆட்டக்காரனாய் நீ இருந்தால்..
படிப்பும் பொருள் ஈட்டும்-- அதை வழங்கும்
நிறுவனங்கள் உனதாய் இருந்தால் ...
ரசிகனாய் ரசிக்க நீ இருந்தால்
எவனுக்கோ கூரைய பிச்சுகிட்டு காசு மழை கொட்டும் ...
போனா கிடைக்காத நேரத்தையும்
பொக்கிஷமா சேர்த்துவச்ச பணத்தையும் தொலச்சு
அவனுக்காய் கை தட்ட நீ இருக்க
உன்னை வைத்து அவன் தொழிலில் எவனோ பிழைக்க ....
பசியும் பட்டினியும் உன்னை புரட்டி போட்டுச்சுன்னா
அவனும் இவனும் அண்ணமிட வரமாட்டான்
அவசியமும் அவசரமும் நமக்குன்னு வந்தா
அது என்னனு கேட்கக்கூட எவனுக்கும் நேரமில்லை ...
என்றோ ஒரு நாள் ...
சூதானமா பொழச்சுக்கடான்னு ஆத்தா சொன்னதும்
செலவ பாத்து செய்யடான்னு பெத்த அப்பா சொன்னதும்
இன்று நினைவில் வருகுதடா...
என் உழைப்பு என் பணம்
எனக்கு மட்டுமே .. என்றும்
என்னை தாங்கிப்பிடிக்கும் என் குடும்பத்திற்கு மட்டுமே ....
சுயநலம் கூட நல்லது தான்
அடுத்தவர் பிழைப்பை கெடுக்காமல்
அடுத்தவர் பொருளை அபகரிக்காமல்
சொந்தமாய் உழைத்து முன்னேறுபவனுக்கு ....
-
உறவே! நல்ல கவிதை வாழ்த்துக்கள்..
உறவே நிச்சயம் சுயநலம் நல்லம், அது பொதுநலத்தை கெடாமல் பார்த்துக்கொள்ளும் வரை.
நிச்சயம் சுயநலம் கேடு, அதில் பொதுநலன் என்ற ஒன்று இல்லை என்றால்..
-
@VenMaThI sis ❤️
Sinthikka veikum varigal sis
Odi odi uzhaichalum oru job vidhu pona the next moment engalukku replacement vanthirum.
Nammakkunu oru kastam vantha evanum vara porathu ille.
Oru kastam vantha namakku namalum. Nammai thaangipidikum nam kudumbam than minchum