FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Symphony on May 13, 2024, 09:19:47 PM

Title: என்றும் நீ என் அம்மா
Post by: Symphony on May 13, 2024, 09:19:47 PM
என்றும் நீ என் அம்மா
அப்பா கட்டிய வீடா இருந்தாலும் அது நமக்கு அம்மா வீடு தான்!
அடுப்படியே அம்மாவின் அலுவலகம் அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம்! காய்ச்சல்
வந்தால் மருந்து தேவை இல்லை அடிக்கடி வந்து தொட்டுப் பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது!
இவ்வளவு வயதாகியும் புது சட்டைக்கு மஞ்சள் வைத்து வருபவனை கேலி செய்யும் நண்பர்களே.....
அது அவன் வைத்த மஞ்சள் அல்ல அவன் அம்மா வைத்த மஞ்சள்......!
டைபாய்டு வந்து படுத்து அம்மாவுக்கு சமைக்க முடியவில்லை என்கிற கவலை!
"அம்மா தாயே" என்று முதல் முதலில் பிச்சை கேட்டவன் உளவியல் மேதைக்கெல்லாம் ஆசான் எந்த பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றிவிட முடியும் சாப்பிட்டு விட்டேன் என்கிற அந்த ஒரு பொய்யைத் தவிர!
அத்தி பூத்தார் போல் அப்பனும் மகனும் பேசி சிரித்தால் விழாத தூசிக்கு கண்களை தேய்த்துக்கொண்டு நகர்ந்து விடுகிறார்கள் அம்மாக்கள் வெளியூர் செல்லும் பிள்ளைகளின் பயண பைக்குள் பிரியங்களை திணித்து வைப்பவர்களை இந்த அம்மாக்கள் பீஸ் கட்ட பணம் இல்லை என்றால் பிள்ளைகள் அம்மாவை தான் நாடுகின்றன காரணம்,
எப்படியும் வாங்கிக் கொடுத்து விடுவாள் அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக் கொள்வாள்!
வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்று தான் கதவு தட்டுகிறோம்!
அகில உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான்........
       "எம் புள்ள பசி தாங்காது!"
கண்கள் இல்லாமல் ரசித்தேன் காற்று இல்லாமல் சுவாசித்தேன்! வார்த்தை இல்லாமல் பேசினேன்!
கவலை இல்லாமல் வாழ்ந்தேன் தாயே! உன் கருவறையில் நான் உயர்த்தெழும் முன்
கருவரையிலும் உன்  கருவிழியிலும் என்னை சுமந்தாய்!
 நான் கருவானதிலிருந்து உருவாகும் வரை உன்னை மெழுகாய் கரைத்தாய் உதிர் உன் உதிரம் அளித்து என்னை வளர்த்தால்! நல்லதோர் அன்பின் இலக்கணமும் நீயே! நல்லதோர் நட்பின் இலக்கணமும் நீயே!
    மீண்டும் உன் கருவறையில் எனக்கு ஒரு இடம் தருவாயா தாயே! மீண்டும் உன் மகனாக பிறந்திடும் வரம் வேண்டும் தாயே
அம்மாக்களைப் பற்றி எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் குறைந்தபட்சம் இரண்டு சொட்டு கண்ணீர் ஈரம் உளறாமல் இருக்கும் இருக்கும்...
என்றும் நீயே என் அம்மா!
உன் மகன் அல்ல நண்பன்
"முனைவர். நாகராஜசோழன்" - (symphony)
Title: Re: என்றும் நீ என் அம்மா
Post by: Unique Heart on June 03, 2024, 08:21:06 PM
வாழ்த்துக்கள் 🌹🌹🌹