FTC Forum
		தமிழ்ப் பூங்கா  => கவிதைகள்  => Topic started by: Mr.BeaN on May 02, 2024, 06:41:40 PM
		
			
			- 
				குடை போல கிளை விரித்து
 நிழல் தன்னில் நமை புதைத்து
 சாமரமாய் இலை அசைத்து
 சந்தனம்போல் வளி பரப்பி
 சிந்தனையில் அமைதி தந்து
 சொந்தமென நெடுநாட்கள்
 சந்ததிகள் பயன்பெறவே
 சந்திகளில் மரம் நடுவீர்..
 
 (இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
- 
				கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹