FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 12, 2012, 02:50:03 PM

Title: அன்பு காட்டுபவன்
Post by: Dharshini on April 12, 2012, 02:50:03 PM
என்னை  எந்நாளும்  காப்பவன்
எந்நாளும்  என்னை  மறவாதவன்
உள்ளங்  கையில்  என்னை  ஏந்துபவன்
தாயை  போல  தேற்றி
அன்பு  காட்டுபவன்
கோழி  தன் குஞ்சுகளை  கூவி
தமது  சிறகால் மூடுவது  போல
என்  மன  சஞ்சலத்தில்  கூப்பிடும்  போது
ஓடோடி  வந்து  அன்பு சிறகால்  மூடுபவன்
சோதனையிலும்  கடும்  வேதனையிலும்  கரம்  நீட்டி  தாங்குபவன்
பெலன் ஒன்றும்  இல்லையே
என்  பெலமெல்லாம் நீ  தானே
உன்  பெலத்தாலே மலை  போல்  வந்த
கஷ்டங்ககளை  பனி  போல் கரைந்திடுமே