FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on January 03, 2024, 06:54:10 PM
-
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்றொரு கேள்வி என்னுள்ளே
எழுந்திட என் கண் உன்னையுமே
கண்டதாய் தானே நானுணர்ந்தேன்
அத்தனை காதல் உன்னிடத்தில்
கொண்டவனாகவே நானிருந்து
அகம் புறம் இரண்டிலும் உன் அழகை
அனு அனுவாக ரசித்திருந்தேன்
இப்படி எல்லாம் இருந்த என்னை
நீ எப்படி தானோ மறந்து விட்டாய்
சொல்படி நடக்கும் பொம்மையினை
நீ சகதியில் இன்றோ வீசி விட்டாய்
கைத்தடி போல உன் காலமெல்லாம்
கூட இருக்க நான் கனவு கொண்டு
கண்களை திறந்து பார்க்கையில்
என் கனவினை கலைத்து சென்றுவிட்டாய்
Reply to ThePopeye