FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on January 03, 2024, 09:00:46 AM

Title: இயலாது என்னாலே
Post by: Mr.BeaN on January 03, 2024, 09:00:46 AM
சொல் எடுத்து பொருள் பதித்து
சுவை மிக ஓர் கவி எழுதி
உன் பாதம் தான் சேர்க்க
முடியுமடி என்னாலே

வார்த்தையிலே தேன் குழைத்து
வஞ்சி உந்தன் அழகெடுத்து
வர்ணிக்க தான் இங்கே
முடியுமடி என்னாலே

வானமதில் உனை இருத்தி
மேக இடி முழங்கிடவே
ஊர்வலமாய் அழைத்து செல்ல
முடியுமடி என்னாலே

நட்சத்திரம் பிடித்து உந்தன்
நெற்றியிலே பொட்டெனவே
வைத்துண்ணை அழகாக்க
முடியுமடி என்னாலே

எத்தனையோ செய்து உன்னை
ஈர்த்திடவே நினைத்திருக்க
எனை நீங்கி நீ போனாய்
ஏன் என்று தெரியாமல்

எப்படி நான் மறுபடியும்
உனை சேர்வேன் என்றே தான்
எண்ணி பொழுதை கழிக்க
இயலவில்லை என்னாலே