FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 30, 2023, 03:06:15 PM
-
சல்லடை போட்டு சளித்தெடுத்து
சான்றோர் பார்த்து அமைச்சராக்கி
சொல்லிய வண்ணம் ஆட்சி
புரிந்த
மன்னர் நிறைந்த நாடு இது
மும்மாரி மழை பொழிய
புன்னகையால் முகம் மலர
கள்ளமில்லா அகம் கொண்ட
மக்களால் நிறைந்ததுவே
புரட்சிகள் பல கண்டு
மிரட்ச்சியில் தான் உழன்று
அயர்ச்சிகளை கடந்து
புகழ்ச்சிக்கு வந்ததுவே
மக்கட்கு அதிகாரம்
வந்திடவே எல்லோரும்
வாக்குரிமை பெற்றுவிட்டு
ஆட்சி செய்ய ஆள் பிடித்தார்
அடிப்படை தகுதிகள்
எதுவும் இங்கு தேவையில்லை
அனுபவம் திறமை என
எதுவும் இங்கு பார்ப்பதில்லை
பணம் தரும் மனிதர் மட்டும்
நல்லவராய் தொன்றிடவே
நாமும் வாக்களித்து
அல்லல் பல காணுகிறோம்
இப்படி ஒரு நிலையை
எண்ணிடவே என் மனதில்
சாபத்தில் நிகழ்ந்த வரம்
இதுவெனவே தொன்றிடுதே