FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 29, 2023, 09:39:04 AM
-
பெண் என்னும்.சொல்லிலே
புள்ளியை தாங்கி
மென்மையை என்றுமே குணத்திலே தாங்கி
உயிர்களை சுமந்திடும் வரமதை வாங்கி
வலிகளை உடலிலும் மனதிலும் தாங்கி
பிறர் நலம் பேனிடும் எண்ணத்தை தாங்கி
தூற்றுவோர் தூற்றிடும் வார்த்தைகள் தாங்கி
போற்றுவார் போற்றிட புகழ்தனை நீங்கி
பொறுப்பிலோர் உவமையாய் மண்ணிலே தங்கி
பொழுதுகள் யாவுமே பிறர்கென நீக்கி
எத்துனை இடரிலும் பொறுமையை தாங்கி
ஏறி மிதித்திடும் உறவுகள் தாங்கி
சுயநலமில்லா பெண் என்னும் உயிரே
சுமைகளை சுகமென சுமக்கும் சுமைதாங்கி