FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 27, 2023, 02:50:10 PM

Title: அவசியம்
Post by: Mr.BeaN on December 27, 2023, 02:50:10 PM
ஊன் வாழ உயிரும்
உயிர் வாழ காற்றும்
காற்றுக்கு மரமும்
மரத்துக்கு வேரும்
வேருக்கு நீரும்
நீருக்கு மழையும் .
மழைக்கு கடலும்
கடலுக்கு உலகும்
அவசியம் என்றேன்
உன்னை நான் காணாத வரை