FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 24, 2023, 07:13:07 AM
-
சொந்தக்காரியாக்க நினைத்த என்னை
சூனியக்காரியாக வதைத்த பெண்ணே
வெள்ளந்தியாய் உன்னிடத்தில் என் காதல் சொல்ல வந்தேன்
கள்ளம் கொண்டு என் காதல் கிண்டலாய் நீ கடந்து சென்றாய்
உன்னிடத்தில் ஏனோ நான் உண்மையான காதல் கொண்டேன்
அழகியென எண்ணிக்கொண்டே ஏளனம் நீ செய்யக்கண்டேன்
ஆழ்மனதில் உன் மனதால் அதிசயங்கள் நிகழ்ந்திருக்க
உன் அழகினை வைத்து நானோ
ஆணியா புடுங்க போறேன் ..