FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 03, 2023, 08:04:38 AM
-
அன்பார்ந்த வாக்காள பெருங்குடி மக்களே
வாழைப்பழ ஊசி போல
ஆசை வார்த்தை பேசி
உங்க மனச கூசி
ஏமாத்த போறான் யோசி
நித்தம் ஒரு பொய்ய பேசி
சக்கரையா வார்த்தை வீசி
ஓட்டுக்காக கூத்தடிக்கும் தாசி
அத நம்பி நாம ஆனோம் பரதேசி
தெரு தெருவா சுத்தி வந்து
வாக்குறுதி அள்ளி தந்து
கேட்டிடுவான் எல்லாரோட ஒட்ட
நாம போட்ட பின்னர் காட்டிடுவான் டாட்டா
தொண்டர் எல்லாம் தலைவருன்னு
தொகுதி எல்லாம் சொல்லிக்கிட்டு
சுத்துறானே அவனும் இங்க ஜாலியா
நாம ஆனோம் அவனின் தினக் கூலியா
சாதி இல்லா சமுதாயம்
நாம் படைக்க வேணும்னு
சத்தமாக மேட போட்டு பேசுவான்
அப்புறமா சாதி ஒட்டு எங்கிருக்கு தேடுவான்
சுத்தம் சோறு போடும்னு
சும்மாவா சொன்னாங்க
கூட்டுறத படம் பிடிச்சு வச்சு
அவனுக்கு ஒட்டும் நோட்டுமா ஆச்சு
கருப்பு பண ஒழிப்பு
பொது உடமை கொள்கை என்று
பேச்செல்லாம் நல்லா தானே பேசுவேன்
ஜெயிச்சிட்டா பாசிச கத்தி வீசுவான்
எல்லாம் யோசிச்சு
நல்ல முடிவெடுத்து
போடுங்க உங்களோட ஓட்ட
காக்கணும் நம்மளோட நாட்ட..!!
-
Entha naada irunthalum Arasiyalvaathiyin job scope onnu than as per ungge poem... Nalla pathivu...
Padithen rasithen..
-
நன்றி