FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on November 27, 2023, 03:41:38 PM

Title: வீரவணக்கம்
Post by: NiYa on November 27, 2023, 03:41:38 PM
என்றோ அழிந்து அடிமையாக வேண்டிய
 இனத்தை உங்கள் கறையற்ற உதிரத்தினால்
மீட்டெடுத்து வாழ வழிகாட்டி
விடைபெற்று காவியமானீர்கள்.

உங்களின் கல்லறைகள் கூடபகைவனைப் பயமுறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் அழித்துவிட்டார்கள்
 உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்!
அதனால்தானே… அனைத்தையும் தடுக்கின்றார்கள்

உங்கள் கல்லறைகளுக்கு வணங்கம் செலுத்த வழியில்லை
என்றாலும்  எங்கள் மனவறைகளுக்குள் வைத்துப் பூசிக்கின்றோம்

இன்று நாங்கள் சுவாசிக்கும் அந்த  மூச்சுக்காற்று உங்களின் இறுதி மூச்சே
Title: Re: வீரவணக்கம்
Post by: Mr.BeaN on November 27, 2023, 06:21:15 PM
தந்திரமாய் நம்மையுமே
வந்திறங்கி ஆட்சி செய்து
மந்திரம் போல் சூழ்ச்சியுடன்
பரங்கியரும் குடி கொள்ள

சக்தி எல்லாம் திரட்டி
சரித்திரத்தை புரட்ட
நித்திரையை கலைத்து
எதிரி முகத்திரையை கிழித்து

இத்தரையை நமக்கே
சொந்தமென மாற்ற 
சந்ததியினர் எல்லாம்
சுதந்திரமாய் வாழ

உறுதியுடன் சிலரும்
குருதியுமே சிந்தி
துச்சமென உயிரும்
மிச்சமின்றி கொடுத்து
.
பெருமையுடன் வாழ
அறும்பாடு பட்டு
சுதந்திரத்தை நமக்காய்
பெருமையுடன் பெற்ற

போராட்ட குணமும் நற்பண்பாய் மனமும்,
எந்நாளும் கொண்டு இந்நாட்டில் தமது
இன்னுயிர் நீத்து நம் குடிகள் காத்த
வீரர் யாவர்க்கும் என் வீர வணக்கம்🙏🙏🙏