FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: NiYa on November 27, 2023, 03:21:31 PM

Title: தலைவன்
Post by: NiYa on November 27, 2023, 03:21:31 PM
உடலை அழிக்கலாம்,சிதைக்கலாம்,கொன்று தின்று
வெற்றிக்களிப்பைக் கூட கொண்டாடலாம்,

எல்லாவற்றையும் அழித்துவிட்டோம், இனி துளியியும்
நினைக்க மாட்டார்கள், கால மாற்றத்தில் மறந்து இருந்து
வெளியூர், வெளிநாடு என சிதறிவிடுவார்கள் எனக்கூட கணக்குப்போடலாம்.


ஆனால், காவல் தெய்வங்கள் காணாமல் போய்,
கரிகாலன் குரல் கூட ஓய்ந்து பதினான்காண்டுகள் கழித்தும்
அதே உணர்வு, நேற்று பிறந்தவர்களுக்கு எப்படித்தெரியும் இதுவெல்லாம்..

யாரும் சொல்லித்தர தேவையில்லை உணர்வுகளைத்தாண்டி
 செல்களின் வழியே கடத்தப்படுவது இது,
பத்து அல்ல நூறு, ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும், இது தொடரும்.

தீர்க்கதரிசனம் மிக்க அவரது ஆளுமையும், துரோகதரிசனத்தால்
 வீழ்ந்த எமது வரலாறும் எப்போதும் அவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கட்டும்


Title: Re: தலைவன்
Post by: Mr.BeaN on November 27, 2023, 03:47:04 PM
உங்கள் தலைப்புகளில் நான் ஓரிரு வரிகள் எழுதலாமா?
Title: Re: தலைவன்
Post by: NiYa on November 27, 2023, 04:21:57 PM
தாராளமாக
Title: Re: தலைவன்
Post by: Mr.BeaN on November 27, 2023, 04:44:24 PM
மாட்சிமை தாங்கிடும் மனமது உடையான்

சொல்லதை கேட்டிடும் படையது உடையான்

அம்பென சீரிடும் சொற்களை கொண்டே

தெம்புடன் யாரையும் சீர் படுத்திடுவான்

முற்பகல் செய்வினை பிற்பகல் தாக்கும்

என்பதை உணர்ந்தே செயல் புறிந்திடுவான்

தப்பும் சரியும் தெரிந்த அவனோ

தப்பாய் என்றுமே வாழாதிருப்பான்

நட்புடன் எவரையும் நெஞ்சத்தில் கொள்வான்

வஞ்சகம் கொள்பவர் கண்டதும் கொல்வான்

எத்துனை துயர் வரின் கலங்கிடா நெஞ்சம்

கொண்டவன் அவனிடம் கவலையும் கெஞ்சும்

இப்படி ஒருவனை தலைவன் என்றே
சொல்வது தமிழ் மொழி கொண்ட மரபு

அப்படி நாட்டிலே பலரும் இருந்தார்
அவர்தம் தலைமையை ஏற்பது சிறப்பு