FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 23, 2023, 05:05:58 PM
-
ஒரு நாளில் நீயே என்னோடு பேசி
உன் துன்பம் எல்லாம் சொல்ல வந்தாய்
உனை நீங்கி போன ஒரு ஜீவனாலே
சில காயம் உன்னில் வந்ததென்றாய்
உன் காயம் தீர்க்க உன்னோடு நானே
என் அன்பை மருந்தாய் கொண்டு வந்தேன்
தவறாக நீயும் எனை புரிந்து கொள்ள
இப்போது நானோ காயம் கொண்டேன்