FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 23, 2023, 02:23:20 PM
-
நீர் போல நானே
நிற்காமல் தானே
என் நாட்கள் எல்லாம்
கழித்திருந்தேன்
பார்க்கின்ற போதே
உன் பிம்பம் எந்தன்
கண்ணோடு தேங்க
சொக்கி நின்றேன்
உன்னோட வாழ
நான் ஆசை கொண்டே
உன் பின்னே நானும்
சுற்றி வந்தேன்
என் காதல் சொல்ல
மறுத்தாயே நீயும்
அதனாலே நானே
கத்துகின்றேன்
யாதுமாகி நீ என்னுள் இருக்க
ஆதரவாய் உன் என்னம் இருக்க
தீதெதுவும் உனை அண்டாதிருக்க
துணை என நான் வந்தேன் உனக்கே
தேவை இல்லை என நீயும் உரைக்க
பாவை உன்னை தான் நானும் மறக்க
முடியவில்லை என எண்ணி இருக்க
பிரிகிறாயே நீ யாரோவாகி...