FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 19, 2023, 07:22:43 AM

Title: கோபம்..
Post by: Mr.BeaN on November 19, 2023, 07:22:43 AM
நெஞ்சில் அமைதி கலைந்து
கொஞ்சம் குணமும் மாறி
பிறர் அஞ்சும்படியாய் இருக்கும்
அற்ப குணமே கோவம் ..

சொல்லில் சுவதனை நீக்கி
வில்லில் பாயும் அம்பாய்
வார்த்தை கணைகள் வீச
வழிதான் அந்த கோபம் ..

கூடி வாழும் மனிதர்
குணம்தனை மெல்ல மாற்றி
தனியாய் செல்ல செய்யும்
தவறின் பிள்ளை கோபம் ..

விவரம் அறியும் பிள்ளை
வயதில் முதிர்ந்த பெரியோர்
என்ன எல்லார்க்கும் பொதுவாய்
இருக்கும் உணர்வே கோபம் ..

கோபம் கொண்டு செய்யும்
எதுவும் வாழ்வில் நிலையாய்
இருக்கப்போவது இல்லை என
யாருக்கும் புரிவது இல்லை ..

மனதில் மெல்ல தோன்றி
மனிதம் கொன்று தின்று
மணிதற்குள்ளே வாழும்
அரக்கன் அவனே கோபம் ..

எரியும் தீயை அணைக்க
நீரென ஒன்று உண்டு
எரியும் கோபத்தீயை
அனைத்திட ஏதுமில்லை ..

என்பதை நாமே உணர்ந்து
மாண்பதை நாமும் காக்க
அன்பினை நாளும் விதைப்போம்
கோப அரக்கனை நாமே ஒழிப்போம்!


இன்சொல் பேசி இருந்திடல் வேண்டும்..
வன்சொல் நாவில் தவிர்த்திட
வேண்டும்..


வம்பை நீக்கி அன்பு செய்வோம்..

அன்புடன் திருவாளர் பீன்