FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 15, 2023, 12:43:40 PM

Title: திரு வள்ளுவர்
Post by: Mr.BeaN on November 15, 2023, 12:43:40 PM
கலங்கரை விளக்கம் போலே

சுவை மிகு குறளை தந்து

பலரது வாழ்வின் உள்ளே

புகுந்து தான் மாற்றம் தந்தான்



நிரைவுறா பொருள்கள் கொண்ட

பாடலின் வரிகள் மூலம்

குறையில்லா வாழ்வை வாழ

அறிவுள்ள கருத்தும் சொன்னான்



பரம்பொருள் என்பது போலே

உருவங்கள் ஏதுமே இன்றி

தரணியில் அவனது சொல்லால்

தரத்துடன் ஆட்சியும் செய்வான்



எத்துனை வாழ்வியல் நெறிகள்

உலகினில உள்ளது எனவும்

எவருமே தெரிந்திட அவனும்

ஏதுவாய் பாடலும் தந்தான்



இரு வரி பாடலில் கூட

ஒருவரின் வாழ்வியல் கூறை

சொல்லிட முடியும் என்றே

உணர்த்தினான் உலகிற்கவனே



பன்மொழி மாற்றம் பெற்றே

பல்சுவை கூடிய நூலாய்

இருந்திடும் திருக்குறள் தன்னை

தந்தவன் அவன் தான் அன்றோ.



கடவுளும் என்னிடம் வரமாய்

என்னதான் வேண்டும் என்றால்

வள்ளுவன் முகம்தனை காண

வாய்ப்பு தான் நானும் கேட்பேன்



அஃதொரு அறிவுடன் புலமை

பெற்ற திரு வள்ளுவன்!! புகழை

சொல்வது தான் ஒரு அறமே!!

அதுவும் எனக்கொரு வரமே!!!



வள்ளுவன் தாசன் திருவாளர் பீன்