FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 10, 2023, 09:27:47 AM

Title: வாழை மரம்
Post by: Mr.BeaN on November 10, 2023, 09:27:47 AM
கண்டா வச்ச மரம்
கனியா கொடுக்குது

பசிச்சா சோறு திண்ண
இலையா இருக்குது

ஒன்னு வச்சாக்க
நூறா பெருகுது

காத்து பலமான
பாவம் சரியுது

உடம்புல கல் இருந்தா
மருந்தா தண்டு தந்து

மறுபடி நட்டு வைக்க
இன்னொரு கண்டு தந்து

முக்கணியில் ஒன்னாக
இருக்கும் உன் தரமே

பந்தலிலும் தோரணமாய்
கட்டுவோம் வாழை மரமே

( குறிப்பு: கண்டு எனும் சொல் எங்கள் ஊர் பேச்சு வழக்கில் வாழை மரக்கன்று என்பதை குறிக்கும்)


அன்புடன் திருவாளர் பீன்