FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 09, 2023, 01:20:01 PM

Title: யார் கடவுள்?
Post by: Mr.BeaN on November 09, 2023, 01:20:01 PM
சேமிச்சு வச்ச காச
சேவிச்ச கோவிலுக்கு
காணிக்கை போட்டு விட்டு
கை தூக்கி கும்பிட்டேன்

எத்தனையோ கோவிலுண்டு
எத்தனையோ சாமி உண்டு
எல்லா சாமிக்குமே
என் குறைய சொன்னதுண்டு

காணிக்கை வாங்கிகிட்டு
கண் திறந்து பாக்கலையே
கை கூப்பி வேண்டுனத
காதுலயும் கேக்கலையே

கேட்காத சாமிய தான்
நாம தெனம் கும்பிடுறோம்
காச தான் செலவு பண்ணி
கோவிலையும் கட்டுகிறோம்

இல்லாத மக்களுக்கு இங்க
ஒரு சாமி இல்ல
எல்லாரும் ஒன்னு போல
இங்க தானே இருப்பதில்லை

கஷ்ட படும் எழைகளின்
கண்ணீர துடைப்பதற்கு
கருணை கொண்ட எந்த ஒரு
கடவுளும் வருவதில்லை

யாரொருத்தன் ஏழைகளின்
துயரம் தான் கண்டு
உதவி தீர்ப்பானோ
அவனே தான் கடவுள்.

என்று நான் கண்டு கொண்டு
கடவுளை மனிதனிடம்
தேடி தான் கண்டு கொண்டேன்
யார்தான் கடவுளென்று

எந்த குறை வந்தாலும் அதை
தான் தீர்த்து வைக்க
கடவுள் தேவை இல்ல
நல்ல ஒரு மனிதன் போதும்

அது போல் நாமும் இனி
நல்ல மனம் ஒன்று கொண்டு
நல்லதையே செய்வோமே
மனிதம் ஒன்றை கொண்டு


அன்புடன் திருவாளர் பீன்