FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 08, 2023, 07:40:15 PM
-
மேகமதை பிடித்து
உன்னிடத்தில் அனுப்பி
சொல்லிடவும் துணிந்தேன்
என் காதலை
தீ சுடரை எடுத்து
தேன் துளியில் நனைத்து
உனக்கெனவே வடிப்பேன்
இப்பாடலை
கூவும் குயில் சப்தம்
கேட்டு அதை போலே
பாடிடவும் துணிந்தேன்
உனக்காகவே
வானுயர்ந்த தமிழின்
ழகரத்தை கொண்டு
உனக்காக வாழ்வேன்
என் வாழ்க்கையை