FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 08, 2023, 07:27:49 PM
-
கண்ணாடி தோழன்
சின்னஞ்சிறு வயதில்
முதன் முதலில்
உன்னை பார்த்ததும்
ஆச்சர்யம் ஆட்கொண்டது
விளையாட்டு
தோழனாய் நீ
கையால் தொட
எத்தனித்தேன்
முடியவில்லை
நான் சிரித்தால்
நீயும் சிரித்தாய்
நான் அழுதால்
நீயும் அழுதாய்
உணர்வுகளின்
பிரதிபலிப்பாய்
நீ இருப்பதாய்
காலம் எனக்கு
உணர்த்தியது
உன்னை காண்கையில்
அழகாய் தெரிந்தால்
என்னவளுக்கும்
அழகாய் தெரிவதாய்
உணர்ந்தேன்
ஏமாற்றம்
எனை ஆட்கொள்கையில்
உன்னிடம் தான் வந்து
அழுவேன்,
என்னை பிரதிபலிக்கும்
உன்னைக்காண்கையில்
கோவம் கொப்பளிக்கும்
எதிரில் இருக்கும்
உன்னை அடிப்பேன்
காயங்களும் வலிகளும்
எனக்கு
நிமிர்ந்து பார்க்கையில்
என் மனதை போல்
துக்கு துகளாய்
சிதறியிருப்பாய்
சிதறிய துகள்கள்
ஒவ்வொன்றும்
என்னை பிரதிபலிக்கும்
***JOKER***