FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 08, 2023, 02:41:59 PM

Title: கண்ணாடி இதயம்
Post by: Mr.BeaN on November 08, 2023, 02:41:59 PM
கண்ணாடி ஒன்று என் நெஞ்சில் உண்டு
பிம்பம் என நானும் உனை அதிலே கண்டு
எனை அறியா மயக்கம் ஏனோ நான் கொண்டு
உன் மீது நானும் காதல் கொண்டேன்

உயர்வெனவே நானும் உனை நெஞ்சில் வைத்தேன்
உணதுருவம் எந்தன் கண்ணோடு
சுமந்தேன்
உன் மனதை இன்றே நானும் அறிந்தேன்
உன் காதல் மெய்யில்லை என்றும்
உணர்ந்தேன்

நீ இன்றி நொடி நேரம் யுகமாக மாற
நான் வந்தேன் பெண்ணே உன்னோடு சேர
என் ஆசை எல்லாமும் உன்னிடத்தில் கூற
மதிக்காமல் ஏன் சென்றாய் நீயும் வெகு தூரம்

உன் உடலை கண்டு நான் இச்சை கொள்ளவில்லை
என் காதல் பெரிதென்று நானும் சொல்லவில்லை
ஒரு நாளில் நீ அறிவாய் என் மனதின் எல்லை
அன்றோ உலகத்தில் நானும் உனக்கில்லை..