FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 07, 2023, 05:01:55 PM

Title: நெருப்பு..
Post by: Mr.BeaN on November 07, 2023, 05:01:55 PM
வானை நோக்கி நிலத்தில் தோன்றும்

காற்றில் பரவி நீரில் அடங்கும்

நிலையதன் பெயரே நெருப்பென
சொல்வோம்..

தீயினை கண்டால் விலகியும் செல்வோம்..

கண்ணில் ஒளியாய் என்றும் தெரியும்

கருணை இல்லா அரக்கணும் அதுவே

மெளிதாய் தோன்றி பெரிதென மாறும்

கிடைத்ததை தின்றே தன் பசி ஆரும்..

விளக்காய் இருந்தால் ஊரே வணங்கும்.

விஸ்வரூபத்தில் யாவும் கலங்கும்..

திருமண பந்தத்தில் சாட்சியும் நீயே

இருள்தணில் ஆட்சியும் புரிபவன் நீயே

பூமியின் மையம் இருப்பதும் நீயே

பூமியின் கோபமே எரிமலை தீயே..!!


நெருப்பு தமிழன் திருவாளர் பீன்