FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on November 06, 2023, 04:21:37 PM
-
முகமூடி பார்த்து
பழகிடும் காலத்தில்
அது அகற்றப்படும் நேரம்
இதயம் அதை
தாங்கும் திராணியின்றி
நிகழப்படுகின்றன
நட்பின் மரணம்
கானல் நீர் போல
வெறும் பொய் வார்த்தைகளால்
கட்டி வைத்த பிம்பம் ஒன்று
உண்மையின் நிழலில்
சாய்ந்து விழுகிறது
பறக்கும் நேரம் பறவை அறியாமல்
உதிர்ந்து போகும் இறகினை போல்
சிலநேரம்
தெரியாமல் காயப்படுத்தும்
நட்பில்
காயம்பட்டதும் அறியாமல்
அஸ்தமனமாகிறது
நட்பு
தாயின் கருவறையிலுருந்து
வெளிவர துடித்து
பின், ஒருநாள்
தாயின் கருவரையிலேயே
இருந்திருக்கலாமோ
என்று என்னும் நேரம்
வாழ்வின் விளிம்பில்
நிற்கும் நேரம்
பொக்கிஷம் என
சேமித்து வைத்தேன்
மண்பானையில்
அது
ஓட்டையாகி
வீணாகி போனதை
நானறிந்திலேன்
இரவின் நிசப்தத்தில்
என் மனதில் எழும்
பேரலை சப்தத்தை
யாரறிவாரோ ?
அன்பின்
புதைகுழியில்
சிக்குண்டு தேடுகிறேன்
பிம்பமில்லா அன்பு
எங்குண்டு என ?!
***JOKER***