FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 04, 2023, 08:21:57 AM

Title: ரயில் பயணம்
Post by: Mr.BeaN on November 04, 2023, 08:21:57 AM
அவசரமா கெளம்பி
அடிசசு புடுச்சு ஓடி
சரியான நேரத்துல
ரயில் நிலையம் போனேன்

கட்டணத்த கட்டி
டிக்கெட்டையும் வாங்கி
தொடர் வண்டியில ஏறி
ஊர் போக பொறேன்

கூட்டமா இருக்குன்னு
கவலையோடு நான் இருக்க
எனக்காக ஒரு இருக்கை
காலியாக இருந்தது.

வேகமா ஓடிப்போய்
இருக்கைய நான் புடிக்க
பக்கத்துல ஒரு கொழந்த
என்ன பாத்து சிரித்தது

பச்சை கொடி பறக்க
வண்டியும் தான் கிளம்புது
ஜன்னல் வெளியே தெரியும்
எல்லாம் பின்னால் நகருது.

காத்தை கிழிச்சிக்கிட்டு
கானம் ஒன்னு பாடிக்கிட்டு
பாதை நீளும் தூரம்
பயணம்தான் போகுது.

உள்ளுக்குள் பல முகங்கள்
ஒவ்வொண்ணும் ஒரு விதமே
ஒண்ணா சேந்து போக
கிடைததிடும் ஒரு சுகமே.

சுற்றியும் பல குரல்கள்
நம் காது கேக்குறப்போ
காதுகள் கூர்மையாகி
அடுத்தவர் கதை கேட்குமே

முகமே தெரியாத மனிதர்
சகவாசமும்
அன்பா உணவ பகிரும்போது
பாசமும்

மனசில் நெடுநாட்கள் மாறாம
இருக்குமே
ரயில் ஸ்னேகத்தில் நம் கவலை
கொஞ்சம் மரக்குமே

அமர்ந்தே போகும் போது ஒரு
விதமா அலுப்பாகும்
அந்த நேரம் எழுந்து நடக்குறப்போ
மனசாறும்

பிச்சைக்காரன் வந்து பிச்சை
கேட்கும். போதிலே
பக்கத்து இருக்கைகாரர்
எரிச்சலோடு கத்துவார்

அவர பாகுறப்போ என் மனசும்
சொல்லுமே
நாமும் வாழும் வாழ்க்கை நம்க்கும்
பிச்சை தானடா..

பசிச்சா சாப்பிடத்தான் உணவும்
கூட கிடைக்குமே
மனசு பரிதவிச்சா பேச ஆளும்
இருக்குமே

புகைவண்டி என்னும் பெயரும்
கொண்ட அந்த வண்டியோ
புகையே இல்லாமல் மின்சாரத்தில்
ஒடுதே

அந்த குறை தீக்க நானும்
சில நேரத்தில்
கழிவறை சென்று புகையை
பிடித்து விட்டு வருவெனே

தடதட சத்தத்தோடு ரயிலும்
தடத்தில் போகையில்
நமக்குள் இருக்கும் சில குழப்பம்
அமைதி நீங்குமே..



நான் ரசித்த ரயில் பயணம்..
அன்புடன் திருவாளர் பீன்