FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 03, 2023, 03:40:48 PM
-
முதல் முறை நீ வருகையில்
உன் முகமதில் சிறு தயக்கமே
சில முறை நான் பேசவே
நீ விளக்கினாய் உன் கலக்கமே
தயக்கங்கள் நீ நீக்கியே
தென் தமிழினில் தான் பேசினாய்
மயில் தோகை போல் கூசியே
என் கவலைகள் நீ போக்கினாய்
பல சமயமும் உன் மனதிலே
எழும் கேள்விகள் தனை கேட்கிறாய்
அச்சமயமும் என் கண்களில் சிறு
குழந்தையாய் நீ தெரிகிறாய்
சில குறும்புகள் சில வீம்புகள்
நீ செய்கையில் உனை ரசிக்கிறேன்
என் செவிகளில் உன் குரலினை
நான் கேட்கையில் தான் உயிர்க்கிறேன்
உன் முகம் முகவரி என
ஏதுமே தேவை இல்லையே
என் நட்பிலே நீ முதல்வரி என சொல்வதும் மிகை இல்லையே.
உன்னிடம் எனக்குமே ஒரு அபிப்ராயம் உண்டு
அதனாலேயே நான் எழுதுவேன்
அபி புராணம் ஒன்று
உனதன்பிலே ஒரு மெழுகை போல்
மெல்ல உருகினேன் நானடி
என் மீதிலே இவ்வன்புமே
நீ கொள்வதும் ஏனடி..?
அன்பு தோழி அபிஅபி க்கு
நட்புடன் தோழன் திருவாளர் பீன்