FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: ஸ்ருதி on April 11, 2012, 07:49:15 PM

Title: கடவுளும் காப்பியடித்திருப்பாரா??????
Post by: ஸ்ருதி on April 11, 2012, 07:49:15 PM
இறைதூதர் பூமியில் இருக்கும்போது அவரை மனிதர்களை தூண்டி விட்டு எதிர்ப்பதும் கொடுமைப்படுத்துவதும் கொல்லுவதும் சாத்தானின் இயல்பு!இறைதூதர்கள் சென்றுபோனவுடன் அவர்களை கடவுளுக்கு இணைவைத்து கும்பிட்டால் போதும் என சீடர்களின் அபிமாணத்தை மிகைப்படுத்தி தூண்டி விடுவதும் சாத்தானின் இயல்பு!இயேசு சதா கடவுளை துதிப்பவராக உயர்த்துபவராக வாழ்ந்து காட்டியும்``என் பிதாவின் சித்தத்தை செய்கிறவனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவேகர்த்தாவே என அழைக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்லை``என எச்சரித்தும் இன்றைக்கு கிரிஸ்தவர்கள் ஜெபம் என்ற பெயரில் 99% இயேசுவிடம் பேசிவிட்டு முடிக்கும் போது மட்டும் பிதாவே-கடவுளே என முடிக்கும் பழக்கம் வந்துவிட்டது!திரித்துவம்,திரியேகத்துவம் என குழப்பத்தில் மூழ்கி கடவுளை விட்டுவிட்டார்கள்!கடவுளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும்(இயேசு) வித்தியாசம் உள்ளது!வழிபாடு கடவுளுக்கு மட்டும் உரியது!நான் `வழி` என்பது நான்தான் என ஆயிற்று!
இது போலவே முந்தய இறைதூதர்களான ராமனும் கிரிஸ்ணரும் கடவுளாக்கப்பட்டனர்!நான் உடைத்தால் மண்சட்டி நீ உடைத்தால் பொண்சட்டி என்றால் மதச்சண்டை வராமல் என்ன வரும்?
`லார்ட்` என்பது அதிகாரிகளை குறிக்கும் மரியாதை சொல்!லார்ட் ஜீசஸ், லார்ட் காட் என்று மரியாதை சொல்லை கர்த்தர் என்று தமிழ் தெறியாத ஒருவர் மொழிபெயர்க்க கர்த்தரை ஒரு கடவுளாக்கிய கொடுமை கிரிஸ்தவர்கள் மீது சத்தானின் நுட்பமான
ஆளுகைக்கு சான்று!லார்ட் ஜட்ஜ்,லார்ட் மினிஸ்டர்,லார்ட் கவர்னர்,லார்ட் சீ,எம்,லார்ட் பி.எம்,லார்ட் பிரசிடெண்ட் என்று அழைப்பது அரசு மரபு!இந்த லார்ட்-ய் கர்த்தர் என மொழிபெயர்த்து ``கர்த்தாவேகர்த்தாவே``என பிரார்த்திக்கும் கிரிஸ்தவர்கள் எந்த கர்த்தரை அழைக்கிறார்கள்?
உலகம் முழுவதிலும் மரித்த மனிதர்களின் மேலுள்ள அபிமானத்தை அவர்களின் பெயரை சொல்லி சில அற்புதங்களை செய்து அவர்களும் கடவுளாகி விட்டனர் என மாயையை பரப்பி கணக்கடங்காத கடவுளை உண்டாக்கி வழிபட செய்து கடவுளை காணாமல் போக செய்யும் வேலையை அசுரர்கள் வெற்றிகரமாக ஆதாம் முதல் செய்து வருகிறார்கள்!அதே வேலையை தான் கடவுளும் இயேசு மூலம் செய்திருப்பாரா?ஆதாம் தான் அர்த்தனாரீஸ்வர்--ஆண் பாதி பெண் பாதி என்பது அவர்தான்!மரித்த மனிதர்கள் பலர் சாத்தானின் கைங்கரியத்தால் கடவுளாக்கபட்டனர்!அதை கடவுளும் காப்பியடித்திருப்பாரா?