FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 03, 2023, 10:41:04 AM

Title: காதலில் நட்பு..
Post by: Mr.BeaN on November 03, 2023, 10:41:04 AM
மானே தேனேனு
மனசார பேசிட தான்

நானும் ஆச பட்டு
அவ கூட பழகினேன்


மதியம் வெயில் போல
சுட்டெரிச்சு என்னிடம்

மாற்றம் காணாம
அவளும் தான் இருக்குறா

எத்தன பொண்ணுங்கள
தேடி தேடி பேசினேன்

யாரும் அவள் போல
எனக்கும்தான் தெரியல

எப்படி பேசினாலும்
அவள் வழியில் வந்துதான்

எந்தன் பேச்சை தானே
எப்பவுமே மடக்குறா

பாவி புள்ள மேல ஆச
நானும் வளத்துட்டேன்

பல தடவை அவ கிட்ட
நேரில் சொல்லிட்டேன்

எத்தனை முறை நானும்
காதல் சொன்ன போதிலும்

எல்லா நேரமுமே ஒரே
போல இருக்கிறா..

எந்தன் நெஞ்சில் அவ
நெனப்புமே இருக்குது

மறுபடி அதுவும் இப்போ
நட்பாக மாறுது

எந்தன் உசுறும் இந்த
மண்ணில் இருக்கும் வரையிலே

உனக்கும் நானே நல்ல
நண்பனாக இருப்பேனே..