FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 02, 2023, 10:44:17 AM
-
உருத்தான உன்ன நானும்
கருத்தாக வச்சிருக்கேன்,!
உன் மொகத்த நெஞ்சோடு
வச்சு தானே தச்சிருக்கேன்!
ஒரு வார்த்தை நீ பேச
தவமாக காத்திருக்கேன்!
உன்னோடு வாழுறத
வரமா நான் கேட்டிருக்கேன்..!
ஆகாய சூரியனை சிமிட்டாம
பாத்தாலும் ..
என்னோட கண்ணுக்குதான் ஏதும்
ஆக போறதில்லை.!
ஏன்னு கேட்டாக்க பதிலா நான் சொல்லுறது..
என்னோட கண்ணுக்கு திரையாக
நீ இருக்க.!
பள பளன்னு நான் இல்ல
பகட்டான் ஆடயில்ல..
உன்னோட காதல் என்ன அழகாதான் காட்டுதாடி..!
உணவுக்கு பஞ்சமில்லை
உண்ண தானே முடியவில்லை..
உன்னோட நெனப்பாலே
பசி எதுவும் எடுக்கவில்லை..!
இப்படித்தான் உன்மேல் ஆச
நானும் வச்சிருக்கேன்..
எப்பத்தான் வருவீயோ?
என்னோட பேசத்தான்!
காதலுடன் திருவாளர் பீன்