FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on November 02, 2023, 10:38:03 AM
-
காதலர் தினம்..
நாள்காட்டி தாள்தனிலே..
நாம் காணும் நாட்களிலே..
சிறப்பான நன்னாளே..
அந்நாளும் இந்நாளே!!
ஆணொன்றும் பெண்ணொன்றும்..
அகத்திலே கலந்திட!
நானென்றும் நீயென்றும்..
பிரிவினை அகன்றிட!
ஈருடல் ஓருயிர்..
என்றெமைஇணைத்திட!
இறைவனின அருள்தரும்..
பண்பினை பெற்ற!
அகிலம் முழுவதும்..
தனக் கொப்பற்ற!
ஈடில்லா ஓர் உறவு..
அதன் பெயர் காதல்!
இறைவன் தொடங்கி பக்தன் முதலாய்..
அரசன் ஆண்டி பிரிவினை இன்றி ..
பிறக்கும் உறவின் பெயர்தான் காதல்!
ஏழை ஓர்நாள் பெரும்பணம் கொள்வான்..
பெரும்பணம் கொண்டவன் ஏழை ஆவான்..
மாற்றம் ஒன்றே மாறா துலகில்
மாறாதிருக்கும் நற்குணம் காதல்!
கடலளவு பாசம் கொண்டு..
கடலின் நுரையளவே கோபம் கொண்டு..
உலகளவு மோகம் கொண்டு..
உனதளவே தாகம் கொண்டு..
மெய்யன்பு தனை கொண்டு..
கை வீசி மண் மீது நடக்கின்ற காதல்!!!
வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
உங்கள் திருவாளர் பீன்