FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on October 30, 2023, 08:32:32 PM

Title: முடியுமோ
Post by: joker on October 30, 2023, 08:32:32 PM
எழுத்து
அலுத்துப்போனவளுக்கு...

முடியுமோ
உன் மனதிற்கு
என்னை நினைக்காமல் இருக்க ?

முடியுமோ
உன் எண்ணங்களுக்கு
எழுத்துக்களை
தேடாமல் இருக்க ?

முடியுமோ
உன் விரல்களுக்கு
என்னை காண்கையில்
என் மார்பில் கோலம்
இடாமல் இருக்க ?

முடியுமா
உன் இதழ்களுக்கு
என்னை முத்தமிடாமல் இருக்க ?

புன்னகை பூக்கள்
எத்தனை எத்தனை
என் கண் முன்னால்
பூத்தாலும்
உன் புன்னகை காணவே
வண்டு போல என்றும்
உன்னுடன் நான் இருப்பேன்

முடியுமோ
என்னை வெறுக்க
உன்னால் ?


***Joker***