FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 29, 2023, 02:14:48 PM
-
நீண்ட நெடுந்தூரமே,
நானும் நடந்து போகிறேன்..
கூட யாரும் வருவரோ,
கூர்ந்து தானே பார்க்கிறேன்..
யாரும் இல்லை துனையென
வருத்தம் கொள்ள வில்லையே..
காணும் யாவும் என்னுடன்
கூட வருது என்கிறேன்..
வேண்டி கேட்ட எதுவுமே
எனக்கு கிடைத்தில்லயே..
என்று தெரிந்த பின்னர் நான்
வேண்டுவதும் இல்லயே..
பகலும் இரவும் மாறியே
பயமும் கொள்ள செய்யத்தான்..
பார்வை பட்ட இடமெல்லாம்
வெளிச்சம் ஒன்று பாயுதே ..
பாரில் உள்ள யாவுமே
எனதாய் இன்று மாறுதே..
வேண்டும் யாவும் கிடைத்திட
இறைவன் தேவை இல்லயே..
என்னை நானே நம்பினேன்!!!
எல்லாம் எனக்காய் வந்ததே