FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 29, 2023, 11:53:36 AM
-
என் முகமும் சிரிக்கிறதே
உன் வரவை கண்டாலே
என் மனமும் அழுகிறதே
அடி பெண்ணே உன்னாலே..
முழு மதியாய் முகமதுவும்
முழு நீள புன்னகையும்
என் நெஞ்சில் உள்ளதடி
நஞ்சாக இந்த நொடி
சந்தோசமா தானே
நீ பேசி திரிஞ்சீயே
சங்கடம் தான் இல்லாம
என் கூட இருந்தீயே
உன் மீது இச்சை கொண்டு
நித்தம் நான் சுத்தி வந்தேன்
சோகம் என் மிச்சம் என
சொல்லாம போனியோ?
(இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருள் அல்லது ஓர் உணர்வைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைக்கு ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஓர் உளவியல் சக்தியாகும். இச்சை என்பது பாலியல், காதல், பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும்)