FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 28, 2023, 10:30:14 PM

Title: நீர்..
Post by: Mr.BeaN on October 28, 2023, 10:30:14 PM
காற்றிலே கருத்தரித்து
மேகமாய் உருவெடுத்து
மழையென மண்ணில் பாயும்
நீர்... குழந்தை!!

ஆகாரம் தேடும் உயிர்களுக்கு
ஆதாரமாய் தனை தந்து
அன்புடன் அகிலம் காக்கும்
நீர்... கடவுள்!!

ஐந்து பூதங்களுள் அடங்கி
அனைத்தையும் தன்னுள் அடக்கி
அரசனாய் மண் ஆளும்
நீர்...மன்னன்!!

பசிச்ச குழந்தைக்கு
ரத்தத்தை பாலாக்கும்
தாயின் பரிவை நமக்கு தரும்
நீர்.. அன்னை!!