FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 27, 2023, 02:46:42 PM
-
உலகமே மாயமாகி
உணர்வுகள் காயமாகி
மங்கையே உனையும் நீங்க
மனதிலே நினைத்ததில்லை..
செவிகளில் சப்தமில்லை
விழிகளில் சலனமில்லை
நாவுகள் நடுங்கிடவே
நானுமே கலங்குகிறேன்...
விண்ணிலே வெளிச்சமில்லை
விடியலை காணவில்லை
பொழுதுகள் மாறாதிருக்க
புலம்பியே நிற்கின்றேனே...
என்னவள் உன்னையன்றி
எனக்கொரு கதியுமில்லை
புரிந்த பின் மீண்டும் வருவாய்
என புரிந்து நான் மீளுகின்றேன்.!!