FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 27, 2023, 02:43:09 PM
-
விளக்கிலே விழும் விட்டிலாய்!
மேற்கிலே விழும் ஞாயிறாய்!
கடலிலே விழும் துளியாய்!
கவிதையில் விழும் மொழியாய்!
வீழ்ந்து கிடந்தேனே நான்..
பொழுதுகள் பல கடந்தே..
புகலிடம் எல்லாம் விடுத்தே..
உன்னிடம் அன்பை பொழிந்தேன்..
உன்னிலே நானும் புதைந்தேன்..
மீள நினைத்தேனே நான்!
உனதுடல் மொழியை படித்தேன்!
நீ உடன் வர நானும் துடித்தேன்!
அறிவியல் கற்று தெளிந்தேன்!
அதன்படி நடக்க துணிந்தேன்!
உன்னில் வீழ்ந்த என்னை ..
மீண்டும் மீட்டு வரவே..
சாவி வேண்டும் அறிந்தேன்!
உன் மனம் தான் சாவி என்பேன்!