FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on October 27, 2023, 11:07:02 AM
-
அரட்டை அரயிலதான்..
அத்தனை பேருக்குமே..
அழகாய் வணக்கம் சொல்லி..
அன்போடு பழகி வந்தேன்!
அந்த நேரத்திலே ..
அவளும் தான் உள்ள வர !
அவளுக்கும் நான்தானே..
வணக்கத்த சொல்லி வச்சேன்!
என்னோட வணக்கத்த.. ஏத்துக்கிட்டஅந்த புள்ள!
கொஞ்ச நாளுலயே எனக்கும்
தான் நட்பானா!
ஒத்த வார்ததையில பேசிக்கிட்ட..
நாங்க பின்னர்..
மொத்தமாக நாளு பூராவும்..
பேசிக்கிட்டோம்!!
என்னதான் ஆச்சோ ..
யாரு கண்ணு பட்டுருச்சோ ?
இப்போ ஏனோ எங்கூடதான்.. பேசலயே!
பேசாம போனதால எனக்கு..
ஒன்னும் வருத்தமில்லை!
சில நேரம் மட்டும் அவ பேச்சு.. காதில் கேட்கும் மெல்ல!!
இதனால இத நானும்
காதலுணு சொல்லவில்லை..
காதலும் கடந்த அன்பு ஒண்ணு
இருக்குதில்ல..!!!
என்னுடன் பேசாமல் போன என் உயிர் தோழிக்கு சமர்ப்பணம்..🙏🙏
தோழன் திருவாளர் பீன்..