FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: VenMaThI on October 11, 2023, 04:41:42 AM
-
அம்மா அடிச்சாலும் அழுதேன்
அப்பா அதட்டினாலும் அழுதேன்
பார்த்ததெல்லாம் வேணும்னு பிடிவாதமாய் அழுதேன்
பள்ளிக்கு செல்ல மறுத்து பாசங்காவும் அழுதேன்
விடுதியில் விட வேணாம்னு விம்மிவிம்மி அழுதேன்
விடுப்பு வேண்டி பொய்யா வலிக்குதுன்னு விதவிதமா அழுதேன்
விளையாட்டில் தவறி விழும்போதும் அழுதேன்
அதே விளையாட்டில் வெற்றி பெரும்போதும் அழுதேன்
நண்பர்களை பிரிஞ்ச நொடியிலும் அழுதேன்
பிரிஞ்சவங்கள மீண்டும் பார்த்த போதும் அழுதேன்
காதலனே கணவனாய் வேண்டுமென அழுதேன்
அவனால் கைவிடப்பட்டபோதும் அழுதேன்
பிரசவ வலியிலும் அழுதேன்
பிள்ளை முகம் பார்த்த போதும் அழுதேன்
பிள்ளைகளின் வளர்ச்சிகாய் அழுதேன்
மலையாய் உயர்ந்து நிற்கும் எம் மழலை கண்டும் அழுதேன்
மனசு வலிச்சப்பவும் அழுதேன்
மகிழ்ச்சியின் உச்சத்திலும் அழுதேன்
பிறந்தப்ப அழுதனா தெரியல
உசுரு பிரிஞ்சு போறப்ப அழுவனா தெரியல
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவுல
அழுகை மட்டுமே என் ஆருயிர் நண்பனாக
அழுகைய துடைக்க ஆயிரம் கைகள் கெடச்சாலும்
ஆழ்மனசு வேதனைய துடைக்க யார் வருவா தெரியல.....
-
அழுகை
அழைக்காமல்
வரும்
விருந்தாளி
வந்து செல்கையில்
தந்திடுவாள்
மனதிற்க்கு
சிறுது நிம்மதியை
மழலைக்கு
அது பசியின்
வெளிப்பாடு
பள்ளி பருவத்தில்
அது வலியின்
குறியீடு
வாலிபத்தில்
அது உறவு பிரிவின்
பேரிரைச்சல்
முதிய வயதில்
அதுவே வாழ்வின் இறுதிவரை
துணை
****joker****
venmathi azhgana kavithai vaazthkkal
-
அழுகை
கிடைக்குமா?என ஏங்கும் போது அது கிடைத்தால் ( ஆனந்த கண்ணீர் )
நினைத்தது கிடைக்காமல் போனால்
துயரத்தை துடைக்க யாரும் இல்லையெனில்
பசியின் அலறல்
பிரிவை சந்திக்கும் பொழுது
வறுமையை நினைக்கும் பொழுது
கொடுமைகளை பார்க்கும் பொழுது
வேதனைகளை தாங்கும் பொழுது
தாய் குழந்தையை கட்டி அணைத்து முத்தம் இடும் பொழுது
குற்ற உணர்ச்சி மனதில் குடி கொள்ளும் பொழுது
வீண் பழியை சுமந்து செல்லும் பொழுது
கல்லறை நோக்கி பயணிக்கும் பொழுது சொந்தங்களுக்கு கொடுப்பது
குழந்தை தொழிலாளர்களை காணும் பொழுது
வலியின் உச்ச கட்டம் அழுகை
கண்களை சுத்தம் செய்வது
கண்களின் குளியல்