FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 02, 2023, 10:40:43 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: Forum on October 02, 2023, 10:40:43 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 323

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2FForummedia%2Fforumimages%2FOU%2F323.jpg&hash=f17f61885dae94b36a21ac0f8df528fc9c5abbcf)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: தமிழினி on October 02, 2023, 11:36:02 AM
வெள்ளை அல்லி மலர் நிறைந்த குளத்தில்..

தனித்து நிற்கும் சிவப்பு அல்லி மலர் போல்...

இந்த அரட்டை அரங்கத்தில்.. என் கவனம் ஈர்த்த என் கண்ணாளனே...

கோபியர் கொஞ்சும் கண்ணனாக நீ வலம் வரும் வேளையிலும் .

மங்கையர் விரும்பிடும்
காதல் வச படுத்தும் வசீகரனாக இருந்த போதும்..

பெண்டிற்கள் உன்னை சூழ்ந்த போதும்..

கண்ணா..!

உன் கவனமெல்லாம் வெண்ணெய் மீது மட்டுமே இருப்பதை போல் ...

என் மீதான சொற்கள் என்னை தனித்து காட்டுகின்றது...

நேரில் கன்டிடா உன்னை
நினைவில் மட்டுமே கொண்டு நகர்கிறது என் நாட்கள்...

அருகில் இருந்து அனைத்து பேசும் ஆதரவு சொற்கள் கூட தோற்று போகிறது ...

ஒரு கணம் நீ என்னை அதட்டுகையில்..

உன் குரல் கேட்டிடா...

 உன் நிறம் அறிந்திடா..

பேதையாக இருந்த போதும்..

உன் மனம் என்னை ஈர்த்து கொண்டு தான் இருக்கிறது...

 ஒவ்வொரு நிமிடம் நான் உன்னை என் நினைவுகளோடு சுற்றி வருகையில் ..


இந்த அரட்டை அரங்கத்தில் கிடைத்த அன்பின் பொக்கிசமே..

உள்ளம் கவர்ந்த உன்னத உறவே

கண்ணியம் தவறா கண்ணாளானே

வரம்பு மீறா உன் வார்த்தைகளின் உரையாடலுக்கு
நான் என்றும் ரசிகையே...


என்றும் உங்கள் நினைவில் ..
உங்கள் அன்பு தோழியாக உங்கள் பாப்பா.




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: Sun FloweR on October 02, 2023, 01:52:54 PM
எந்தக் கத்தியாலும் காயமாகவில்லை...
எந்தக் கோடாரியும் பிளந்துவிடவில்லை..
எந்த வாள் வந்தும் கீறி விடவில்லை..
எந்த அம்பும் தைத்துவிடவில்லை...
இவையாவும் மொத்தமாய் சேர்ந்து என்னை  வலிக்கச் செய்கிறதே உன் ஒற்றைப் பிரிவினாலே..

சிறுகோட்டுப் பெரும் பழம் தாங்கிய இவளின் உயிர் சிறிது தான்.. ஆனால்
உன் மேல் கொண்ட காமமோ மிகப் பெரிது..

கட்டி அணைத்த கணங்கள் காணாமல் போய்விட்டதே..
மூச்சடக்கி முத்தமிட்ட முந்தைய காலங்கள் பறந்து விட்டதே ..

காதலோடு முயங்கிய நேரங்கள் தொலைந்து தான் போய்விட்டதே..
கற்பனையோடும் கண்ணீரோடும் காலங்கள் கரைகின்றதே...

கன்றும் உண்ணாது கலத்தினும் வீழாது வீணாகிப் போகும் பாலொத்தஇளமையை எதைக் கொண்டு செலவிட...?
உன்னவன் எங்கேயென்று கேள்வி கேட்கும் இந்த நல்லிரவையும் நறும்அல்லியையும்
ஏது சொல்லி கடப்பேன்??
என்ன சொல்லி விளக்குவேன்??
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: VenMaThI on October 02, 2023, 02:58:41 PM

❤️❤️❤️❤️

கள்வனின் காதலி

பாறைபோல் இருந்த நெஞ்சமது
அவனது வருகையால்
காற்றில் பறக்கும் பஞ்சாய்போனது
பஞ்சாய்போன நெஞ்சமோ இன்று
அவனது பிரிவால்
பாறையைவிட பாரமாய் போனது...

மண்ணை பார்த்து நடந்தவள்
மணவாளனை பார்த்த நொடி வீழ்ந்தாள்
வீழ்த்தியது எதுவோ யாரரிவார்
களவாட வந்த கள்வனவனின்
கூர்மையான கண்களோ
காந்தம் போன்ற குரலோ
பறந்து விரிந்த தேகமோ
தொட்டு அணைத்த ஸ்பரிசமோ...
எதுவென்று அறியாள்.. ஆனால்
அன்று வீழ்ந்தவள் இன்னும் எழவில்லை
அந்நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை...
கண்ணாளனவன் காதலால்
களவு போன நெஞ்சோடு
கள்வனின் வருகைக்காய்
காதலாள் கலங்குகிறாள்...

குடும்ப பாரமதை சுமக்க
கடல் தாண்டி சென்றானோ...
மக்கள் மீதுள்ள நேசத்தால்
நம் தேசம் காக்க சென்றானோ...
மாதவியை தேடும் கோவலனாக
கண்ணகியை மறந்து சென்றானோ..
அல்ல
பாவமும் புண்ணியமும் நிறைந்த
இவ்வுலகை விட்டு மாண்டு தான் போனானோ...

கள்வனே
உன் நேசமும் பாசமும்
நெஞ்சினில் நிறைந்திருக்க
வஞ்சியவள் வாடுகிறாள்...
நீ வருடும் நாளுக்காய்
வாஞ்சையோடு காத்திருக்கிறாள்...
மாற்றம் ஒன்றே மாறாததென்று
மாறுதலுக்காய் தவமிருக்கிறாள்..

துவண்டு போன அவள் மனதை
துணையாய் வந்து தேற்றிடு..
கள்வனின் காதலியை
கரம்பற்றி காத்திடு.....

❤️❤️❤️❤️



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: Minaaz on October 02, 2023, 04:52:57 PM
பெண்மை

என் தோழிக்கு ஓர் மடல்,

பெண்ணே,...
 பல இன்னல்கள் தாண்டி இதிகாசங்களிலும் இடம் பிடித்த உமக்கு....
 மங்கை,
மாது,
மகளிர்,
 அணங்கு என்று பெயர் இருக்கையில்.....

 அடுத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை செவிமடுத்து...

 அகம் உடைந்து நொறுங்குவதேனோ..

அடுப்பங்கறை விறகுகளில் கருகிய கனவுகளை......,

 மெய்யாய் வடிவமைக்க போராடிய பலர் வரலாற்று நூல்களில் சுடர் விட்டு ஒளி தருவது விந்தையாயினும்.....

 அவர்களின் உழைப்பின் உச்சத்தின் பரிசல்லவா??..

உன்னை வெறுத்தொதிக்கிய காலம் போய்....,

 தாய், மகள், மனைவி போன்ற பரிணாமத்தில் போற்றப்படுவது உன் வலிமையின் ஆதாரமல்லவா??..

பெண் என்பவர் இழிவாய் போற்றப்பட்ட போதிலும்......
உன்னை ஆணிற்கு நிகராய் வலுவூற்றிய பாரதிக்கவி....,

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு,  நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு"

 உன்னை உறுதியாய் போராட வலி வகுத்திட்ட  ஓர் ஊக்கியல்லவா??..

பெண்ணிற்கு கல்வியின் சிறப்புக்கள் அதிகமாக ஊட்ட தேவையில்லை....

 என்றிருந்த காலம் போய் பெண்களே இவ் வையகம் எங்கும் கல்வியில் மேலோங்கியிருப்பது பெண்களின் உரிமைகளுக்கும் இடமுண்டு என்பதற்கு எடுத்துக்காட்டல்லவா??....

 இதுவே பாரதிக் கவியிலும் அரங்கேறியிருக்கிறது,...

 "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தார் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்...."

உன் உரிமைகளுக்கு இத்துனை ஆதாரங்கள் இருக்கையில்,.....

 பிறரை நம்பி சிறைக்கைதியாய் சிறைப்பட்டு வாழ்வதிலும்,

பிறரது நாவுதனில் தவழ்ந்திடும் வார்த்தைகளுக்கு இரையாய் ஆவதிலும் இல்லை இங்கு உன் இலக்கு...

பெண்மை என்ற உயரிய அந்தஸ்தினால், அன்பு என்ற வலிய அறத்தைக் கொண்டு
உலகம் என்ற நான்கெழுத்தை ஆழ வகுத்திடும் வரைபடத்தில் உள்ளது உனக்கான யாவும்..

யார் என்ன கூறினும் அந்த வார்த்தைக்குள் உன் இலக்கிற்கான உபயோக வார்த்தை இருந்தால் ஏற்றுக் கொள்....,

 இல்லையேல் அவ்விடத்திலே விட்டு விட்டுச் செல் உன் நம்பிக்கையே நீ என மாற்றிவிடு.....

 பச்சோந்தி போல் மனிதர்கள் பல வேடம் போட்டுத்தான் நகர்கின்றனர்....

 யாரையும் சார்ந்து நில்லாதே.....,
கடந்து செல் புன்னகையுடன் காலம் காயங்களையாற்றும்....

 நினைத்தவை நிறைவேறும் என்ற ஓர் உச்ச நம்பிக்கையில்....,

உனக்குள் உன் உண்ணதத்தைத் தேடு,, தொய்ந்து விடாதே....!!

இப்படிக்கு,
உனக்குள் ஒருத்தி....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: KS Saravanan on October 02, 2023, 05:33:20 PM
நினைவெல்லாம் நீ

இரவின் நிழலில் நிலவும் நட்சத்திரங்களும்
மென்மையாக மின்னும்போது
உனதன்பின் சுடரால் வெளியான இனிவான
தருணங்களை நினைவு கூர்கிறேன்..!
உனது ஸ்பரிசம் ஒரு மெல்லிய தென்றல் போல
எல்லா பயங்களையும் துடைத்தன..!

அன்பே உனதன்பின் பிரிவின் வலியால்
இதயம் சுமையாக கனக்கிறது..!
உனது சிரிப்பொலி இசை போல எனது காதுகளில்
இன்னும் எதிரொலிக்கிறது..!
தனிமையின் அரவணைப்பில் உன்னுடைய பெயரை
இதய துடிப்பாய் துடிக்கிறேன்..!

நினைவெல்லாம் நீயிருக்க நெஞ்சம்
நெருப்பாய் எரியுதே..!
அணைக்கும் வழி தெரியாமல்
கானல் நீயாய் போகுதே..!
காலத்தால் அழியாத காவியமாய் நீயிருக்க
காத்திருக்க முடியாமல் உன் காலடி தேடுகிறேன்..!
பகலிலே இருந்தாலும் இருள் சூழ்ந்து கிடக்கிறேன்
நினைவிலே உன்முகம் நிலவொளியாய் காண்கிறேன்..!

கானா தேசம் காண கரை கடந்து போனாயோ..!
கண்ணில் எனை ஏற்றி கண் விழிக்காமல் போனாயோ..!
காண்பதெல்லாம் கணவாய் போக கண் விழித்து வருவாயா..!
வழி கூறி போயிருந்தால் தவறாமல் வந்திருப்பேன்..!
தனிமையின் கொடுமைதனை எனக்களிக்க நினைத்தாயா..
தனியாக விட்டுவிட்டு தனிமரமாய் போனாயே..!
போகும் இடம் எதுவென்று சொல்லாமல் போனாயே..!
நீ வரும் வழி எதுவென்று அறியாமல் காத்திருக்கிறேன்..!
உன் நிழல் தேடி எக்கணமும் அலைகிறேன்
அன்பே..!
இல்லையென்றால் என் என்னுயிரை துறப்பேனே..!..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: TiNu on October 02, 2023, 11:11:40 PM
என் இனிய தனிமையே..
=========================

என்னை நான் முழுதாய் புரிந்துகொள்ளும்
தருணங்களை எனக்கு தருவாயா தனிமையே..

என் மனதை முழுதாய் ஆட்கொள்ளும்
என் மன்னவனின் நினைவுகள் வேண்டாமே..

இப்பிறவியில் இவள் மேற்கொள்ளும்
கடமைகள் எதுவென தேட வேண்டாமோ..

ஓரறிவு முதல் ஆறறிவு உயிர் உட்கொள்ளும்
ஆகாரம் கொடுத்துமகிழ நேரம் வேண்டாமா..     
 
நமக்கு யாரும்மில்லையென கவலைகொள்ளும்
உயிர்களுக்கு ஊக்கமளித்து அரவணைக்க வேண்டாமா

இவள் ஓர் சரித்திரம் படைப்பாள் என ஆசைகொள்ளும் 
என் ஆசானுக்கு எனது வெற்றியை பரிசளிக்க வேண்டாமா.. 

என் பெற்றாரும் உற்றாரும்  மன மகிழ்ச்சி கொள்ளும்
சமூக நன்மதிப்பை,  நான் பெற முயற்சிக்க வேண்டாமா..   

பல கடமைகள் எனக்காக காத்திருக்க, எனை கவ்விக்கொள்ளும் 
என் அவனின் நினைவுகள் இப்போது வேண்டாமே..

என் கடமைகளை, நான் உணர்ந்து கொள்ளும்
கணப்பொழுதினை எனக்கு தந்துவிடு தனிமையே. 

தனிமையே! நீயே, என்னை கைகோர்த்துக்கொள்..
நிஜத்தில் அவன் வரும்வரை.. நீயே! வேண்டும்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: Mani KL on October 03, 2023, 10:29:19 AM
தனிமையில் தவிக்கும் மனது!!!

தனிமையில் தவிக்கிறேன்!!!
கடந்து போன நினைவுகளை எண்ணி சந்தோஷப்படுவதா??
கடந்து செல்லும் நினைவுகளை எண்ணி வருந்துவதா??
அதை எண்ணி எண்ணி
தனிமையில் தள்ளாடுகிறது மனது!!

அன்பு அதிகமா  கிடைத்தத்தின் விளைவா??
அன்பின் ஆணவத்ததாள் ஆடியதின் விளைவா??
அன்பு முழுமையாக தராமல்
அன்பு பாதியை தந்து பரிதவிக்காவிட்டாயே??
காலத்தின் கட்டளையா
கடவுளின் வரமா
அதை எண்ணி எண்ணி
தனிமையில் தள்ளாடுகிறது மனது!!!

குழந்தை பருவம் இல்லை விட்டு விட
இனிமை தேடும் இளமை பருவம்!

மறந்து போகும் மழலை பருவம் இல்லை
மறக்க மறுக்கும் இளமை பருவம்!!

கடந்து சென்ற காலம்
பூக்கள்  பூக்கும் காலம் போல
பார்த்து ரசித்த காலம்
மனதுக்கும் உடலுக்கும் குளிர்மையான காலம்
அன்பின் அரவணைப்பில் சந்தோசத்துடன்
இணைந்திருந்த காலம்     (இணைத்திருந்த போது )                                     

கடந்து செல்லும் காலம்
மரங்களின் இலைகள் உதிரும் காலம் போல
பார்க்க முடியாமல் ரசிக்க முடியாமல்
மனதுக்கும் உடலுக்கும் சோர்வை தரும் காலம்
நினைத்து நினைத்து நீங்கா துயரத்தில்
தனிமையில் தவிக்கும் காலம்  (தனிமையில் இருக்கும்போது )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: BreeZe on October 03, 2023, 03:20:33 PM


மை டியர் crushu
நான் தான் நீ பல்லு வெளக்குற brushu
நீ என் lifela வந்ததுனால என் heartல ஒரே rushu
உன்ன பாத்தாலே என் face ஆகுது blushu

சரஸ்வதி கைல இருக்கும் வீணை
உன்மேல காட்டுற அன்புக்கு கட்டமாட்டேன் அணை
மியாவ்ன்னு கத்தும் பூனை
என்ன விட்டு போயிடாதடா வெண்ணை

எங்க பாட்டி போடுவாங்க வெத்தலை
எனக்கு தேடுறங்க வீட்டுல மாப்பிள்ளை
உன்கிட்ட எனக்கோ பேச டைம் பத்தல
நீ வேற பொண்ணு கிட்ட பேசுன மவனே செத்தலே

இந்த மாசமோ புரட்டாசி
நீயும் நானும் செம ராசி
உனக்கு முன்னாடி எனக்கு எல்லாமே தூசி
என்ன வேண்டானு சொல்லுறதுக்கு முன்னாடி நீ யோசி

நீ நல்லா பேசுவ besha
நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து வாழுவோம் massa
நீ என் life ல இருந்த நா போவேன் நாசா
இப்படி என்ன தனியா பொலம்பவிட்டுட்டியே ராசா


CopyRightZ By
BreeZe

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 323
Post by: joker on October 03, 2023, 05:51:40 PM
சுகமாய்தான் பிறந்தேன்
தாயின் வயிற்றில்
பத்து மாதம் கிடந்து

சுகமாய்தான் வளர்ந்தேன்
தந்தையின் தோளில்
உலகத்தை கண்டு
தாயின் மடியில்
உலகத்தையே அடக்கி

அழகான தங்கையும் 
அன்பான தம்பியும்
வருகையில்
ஆனந்தம் கொண்டேன்

தீபாவளிக்கு புது துணி,
பட்டாசு வாங்கி வர சென்ற
பெற்றோர் வந்தனர்
விபத்தில் கருகி

கருகியது அவர்கள் உடல் அல்ல
எங்கள் வாழ்க்கையும் தான்

அழுது அழுது
கண்ணீர் வற்றியது
இருந்த இரண்டு உறவை
இழந்த பின் இருக பற்றிக்கொண்டேன்
இருக்கும் இரண்டு உறவுகளை
தங்கைக்கு தாயானேன்
தம்பிக்கு தந்தையானேன்

கன்னி வயதை எட்டியவுடன்
எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள்
பறந்தது,

காதலன் குதிரை மீதமர்ந்து
என்னை கவர்ந்து செல்வதாய்
கனவும் வந்தது
கனவுகள் என்றும் மெய்ப்பதில்லை

உடன் பிறந்த இருவரையும்
படிக்க வைத்து,
மனமும் முடித்து வைத்தேன்
கனவின் வலி நானன்றி வேறுயாரறிவார்?!

காதோரம்
எட்டிப்பார்க்கும் நரை
வாலிபம் தொலைத்ததை
உரக்க சொன்னது
ஊராருக்கு

வலிகளில்
மிகவும் கொடிய வலி
பகிர்ந்து கொள்ள முடியாத
உணர்வுகளை
மனதிற்குள்ளே புதைத்து வைப்பதுதான்

பசித்த வயிறு
பணமில்லா வாழ்க்கை
பொய்யான உறவுகள்
இவை எல்லாம்
கற்று தந்த ஊர்

காலத்தின் குரூரத்தில்
தனித்து விடப்பட்டவளுக்கு
வைத்த பெயர்
"முதிர்கன்னி"