FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 28, 2023, 12:59:43 PM
-
இன்னொருமுறை
நாம் சந்தித்துக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
பரஸ்பரம் அன்பை
பரிமாறிக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
வெட்க புன்னகை
எனக்குள் கடத்துவாயென்றோ
இன்னொருமுறை
செல்ல செல்ல
சண்டகையிட்டுக்கொள்வோமென்றோ
இன்னொருமுறை
உன் தோள் சாய்ந்து
ஆறுதல் அடைவேனென்றோ
இன்னொருமுறை
சிறிதாய் மட்டும் நமக்குள்
மௌனங்கள்
கடந்திடுமென்றோ
இன்னொருமுறை
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்
***JOKER***
-
இன்னும் பல முறை
உங்கள் கவிதை இங்கே கனா வேண்டும்!
அழகிய கவிதை!