FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SaMYuKTha on September 27, 2023, 12:04:03 AM
-
நண்பர்களுக்காக
எதுவும் செய்யும் நட்பாக
இருந்தவள் நீ
இனி எங்கே தேடுவது உன்னை ?
முகவரியாய் இருந்தவள் நீ
முடிவுரையாய் மாறினாய்
எங்களை தவிக்கவிட்டு
நீ எங்கோ பயணமானாய் !
இழந்து போன
எங்கள் சந்தோஷங்கள் கூட
உயிர் பெறும்
நீ பேசும் போது!!
உன் சரவெடி பேச்சு
நினைவுகளாக மாறியது
மீண்டும் எப்போது
உன் குரல் நிஜம் ஆகும்!!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் ஆனாய்
கலங்காதவனும்
கலங்கி நிற்கிறான் இன்று
துணிவாய் நண்பனுக்கு
நிழலாய் இருந்தவள் நீ !
புரியாத மொழியில்
பேசும் குழந்தைக்கு
பெறாத தாயாய்
இருந்தவள் நீ !
அன்பும் அரவணைப்பும்
வேண்டும் என்பவருக்கு
அழகாய் ஒரு நட்பு
ஆழமாய் ஒரு உறவு என்று
இருந்தவள் நீ !
எங்களின் அனைத்து
சேட்டைகளுக்கும்
கேள்விகளுக்கும்
அன்பை மட்டுமே பதிலாய்
தந்தவள் நீ !
வலிகள் நிறைந்த வாழ்க்கையில்
உன்னை நீயே
செதுக்கும் சிற்பியாய்
வாழ்ந்தவள் நீ !
உன் பிரிவின்
வலியை நாங்கள் உணர்கிறோம்
நீ விடைபெற்று
வெகுநாட்கள் ஆனது
அதை கடந்து போக இயலாமல்
கனம் ஆகிறது மனது!!
தொலைத்த பொருளும் தெரியும்
தொலைந்த இடமும் தெரியும்
ஆனால் உன்னை
திருப்பி மீட்கத்தான் முடியவில்லை!!
தொலை தூரத்தில் நீ
இருந்தாலும்
எங்கள் எழுத்துகளில்
எங்கள் எண்ணங்களில்
எங்கள் நினைவுகளில்
என்றும்
எங்கள் அருகில் வாழ்கிறாய்
அழியாத பொக்கிஷமாய் !!
நாங்கள் வரமாய் கொண்டாடும்
பெண் தேவதை நீ!
உன் குரல் கேட்க தவம் இருக்கிறோம்
மீண்டும் பிறந்து வா !!!
-
நீங்க சந்திச்சது மிக பெரிய இழப்பு,
உங்கள் நம்பியின்,
அழகிய பெண் தெய்வத்தின்,
இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...
அவங்க விற்று சென்ற நண்பர்கள்
ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாக ஒரு சிறிய சந்தோஷம் பிறக்கும்.
நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் அவங்ளோட எண்ணமாய் இருந்து இருக்கும்.
உங்கள் கவிதையில் இருப்பது போல்
எங்கள் அருகில் வாழ்கிறாய்
அழியாத பொக்கிஷமாய்!!
நினைவுகளை அழியாத பொக்கிஷமாய் பாதுகாக்க வெண்டும்.
எப்போழுதும் உங்கள் எல்லோருடைய நினைவுகளில் தான் அவங்க இன்றும் உயிர் வாழறங்க.
அவங்க விட்டு சென்ற நினைவுகளில்
வாழும் நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்
❤️🕊
-
உணர்வுபூர்வமான கவிதை .
.
நல்ல நட்பிற்கு பிரிவென்பது கிடையாது.
பழகிய அழகிய தருணங்களும் , அதன் நினைவுகளும் பிரிவின் வலிக்கு ஆறுதலான அருமருந்து.
நெகிழ்ச்சியான கவிதை அன்பின் ஸ்நேகிதியே !!!