FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on April 11, 2012, 02:48:40 PM

Title: வேரை மறந்த விழுதே...
Post by: Anu on April 11, 2012, 02:48:40 PM


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1025.photobucket.com%2Falbums%2Fy313%2Froserose73%2Fftc%2Fmom.jpg&hash=a2d4ad38f9a91ba0b27abb7e2a11a21bb2a808c8)

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே என்று
விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.


ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.


தனியாய் பயணம் கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.


தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?


தலையில் ஊற்றிய நீரது விரைவில்
காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும் வருகையில்
பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!
Title: Re: வேரை மறந்த விழுதே...
Post by: Jawa on April 11, 2012, 04:36:46 PM
தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?


Nice lines :) :) :)..... unamayile ipoluthu elam petra ammavai kooda silar thaniyaga thavika vittu selgindranar ithu migavum kodumaiyana vilai........
ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
indha nandriyai naam endrum maraka koodathu :'( :'( :'( :'(
Title: Re: வேரை மறந்த விழுதே...
Post by: suthar on April 12, 2012, 01:03:53 AM
anu nice lines
Title: Re: வேரை மறந்த விழுதே...
Post by: gab on April 12, 2012, 12:26:55 PM
என்றும் அன்னையின் பாசத்தை மதிக்க மறக்க கூடாது. எந்த சூழல் வந்தாலும் அன்னையை முதுமை பருவத்தில் நாம் கனிவான சொற்களாலும் ,இனிய நடத்தையாலும் மனம் மகிழும்படி வைத்துகொள்ள வேண்டும். நல்ல கவிதை அணு.
Title: Re: வேரை மறந்த விழுதே...
Post by: ஸ்ருதி on April 13, 2012, 08:46:52 PM
cuty no words to say... :'( :'( :'(